மொகாலியில் நேற்று மாலை நடந்த 46–வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ஐதராபாத் சன் ரைசர்ஸ்  ஆகிய அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற  பஞ்சாப் அணி பேட்டிங்தை தேர்ந்தெடுத்தார்.
தொடக்க  ஆட்டக்காரர்களான விஜய் நிதானமாக ஆட மறுமுனையில் ஹசிம் அம்லா அடித்து ஆடினார். விஜய் 6 ரன் எடுத்த போது முஸ்தாபிஜூர்ரகுமான் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து விருத்திமான் சஹா, குர்கீரத்சிங், மற்றும் மில்லர் அம்லாவுடன் இணைந்தார் ஆனால் ஒருவரும் குறிப்பிட்ட படி அடித்து ஆட வில்லை. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்லா 96 ரன்கள் கடைசி ஓவரில் புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன்  ஐதராபாத் அணியின்  வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் விளையாடத் துவங்கினர்.  ஷிகர் தவான்  25 ரன்கள் எடுத்த நிலையில் மொகித் ஷர்மாவினால் ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார். சிறப்பாக ஆடிய  வார்னர் அரை சதத்தை எட்டினார்.  ஆனால் எதிர்பாரா வீதமாக வார்னர்  அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து யுவராஜ்சிங், தீபக் ஹூடாவுடன் இணைந்து விளையாடத்துவங்கினார்.  இருவரும் அடித்து ஆடி  ரன்களை சேர்த்தார்கள்.  அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 139 ரன்னாக உயர்ந்த போது தீபக் ஹூடா 34 ரன்கள் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியில் யுவராஜ் அபார விளையாட்டு மூலம் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.