ஐபில் 15வது போட்டி: பஞ்சாப்பை வீழ்த்திய டெல்லி!

ஐபில் 15வது போட்டி: பஞ்சாப்பை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல் டி20 கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற (15.4.17) 15 வது போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.