கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.  இதில் டில்லியில் நடக்கும் 54வது லீக் போட்டியில், மும்பை,கொல்கத்தா அணிகள் மோதின.  இதில் ’டாஸ்’ போடுவதற்கு முன் பலத்த மழை பெய்த காரணத்தினால், ஆட்டம் துவங்க தாமதமாக ஆட்டம் தவங்கியது.
முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர் சிம்மன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ரோகித் சர்மா (27)வும் நிலைத்து நின்று ஆடவில்லை.  சவுரவ் திவாரி (52) ,  ராயுடு (63) ஆகியோர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கடைசி நேரத்தில் போராடிய போலார்டு ஓரளவு கைகொடுக்க, மும்பை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து , 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் நரைன் டக் அவுட் ஆனார்.
இவருடன் களமிறங்கிய லின் 14 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.

பிறகு களமிறங்கிய காம்பீர் 21 ரன், ராபின் உத்தப்பா 2 ரன், பாண்டே 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய யூசப் பதான் 20 ரன்களும், கிராண்ட்ஹோமி 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டும் எடுத்தது. இதனையடுத்து மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.