ஐபிஎல் 2018 : சென்னைக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு

 

மும்பை

பிஎல் 2018 முதலாம் குவாலிபையர் போட்டியில் சென்னைக்கு 140 ரன்களை ஐதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது.   இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்ந்து எடுத்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.   அதை ஓட்டி அடுத்து களம் இறங்க உள்ள சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.