கொல்கத்தா:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விலகியுள்ளார். இதன்காரணமாக வரும்  ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.

பந்து சேதம் காரணமாக, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ், துணை கேப்டன் வார்னர், வீரர் பார் கிராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உளள 11வது ஐபிஎல் சீசன் தொடரில் விளையாட 28 வயதான  ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கோல்கட்டா அணிக்காக, ரூ. 9.4 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டு இருந்த நிலையில், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, வலது கால் எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக விளையாட்டில் இருந்து விலகிய நிலையில், சிகிச்சை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்தே ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைரடர்ஸ் அணியில்,  மிட்சல் ஸ்டார்க்-க்கு பதிலாக மிட்சல் ஜான்சன் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.