ஐ பி எல் 20108 : டில்லி அணியை வென்ற பஞ்சாப்

டில்லி

பிஎல் 2018 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டில்லி டேர் டெவில்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

நேற்று ஐபிஎல் 2018 போட்டியின் 22 ஆவது லீக் ஆட்டத்தில் டில்லி டேர் டெவில்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.    டில்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.  பேட்டிங்கில் இறங்கிய பஞ்சாப் அணி தனது திறமையான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது.

டில்லி அணி அடுத்ததாக 144 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கியது.    அந்த அணியும் திறமையாக விளையாடியும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.    இதை ஒட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.