ஐபிஎல் 2018 : ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா இரண்டாம் ரவுண்டுக்கு முன்னேற்றம்

கொல்கத்தா

பில் குவாலிபையர் முதல் சுற்றின் இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

ஐபில் 2018 ல் குவாலிபயர் போட்டியின் முதல் சுற்றின் இரண்டாம் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.   இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய கொல்கத்தா அணி துவக்கத்தில் மிகவும் தடுமாறியது.  பின்னர் சமாளித்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

அடுத்து ராஜஸ்தான் அணி 170 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கியது.   துவக்கத்தில் இருந்தே அபார ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி ரசிகர்களை கவர்ந்தது.   ஆனால் வெற்றியை நெருங்கும் நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின.   ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வையை தழுவியது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் கொல்கத்தா அணி குவாலிபையர் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.