ஐபி\எல் 2018 : மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்

பிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்ப்பூரில் மோதின.    டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.    துவக்க வீரரான லீவிஸ் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.    அணித்தலைவர் ரோகித் சர்மாவும் முதல் பந்திலேயே அவுட் ஆனது மும்பை ரசிகர்களை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இஷான் சர்மாவும் சூரியகுமார் யாதவும் அரை சதம் தாண்டினர்.   மொத்தத்தில் 20 ஓவரில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்திருந்தது.   ராஜஸ்தான் அணி 168 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கியது.   துவக்க ஆட்டக்காரர்களன ராகனே மற்றும் திரிபாதி 17 மற்றும் 8 ரன்களே எடுத்திருந்தனர்.   அடுத்தடுத்து வீரர்கள் களம் இறங்க ராஜஸ்தான் அணி 19.4 ஒவரில் 7 விக்கெட்டுகளை எடுத்து 168 ரன்களை எட்டியது.     அதை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.