பெங்களூரு

பிஎல் 2018 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது.

ஐபிஎல் 2018 லீக் போட்டியில் நேற்று பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.  முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய பெங்களூர் அணி ஆரம்பத்தில் சற்றே தடுமாறியது.  ஆயினும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 218 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணிக்கு 219 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    வேகமான தொடக்கம் இருந்த போதிலும் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.   இதை அடுத்து ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்டது.