ஐபிஎல் 2018 : பெங்களூருக்கு 89 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப்  நிர்ணயம்

ந்தூர்

பிஎல் 2018 லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 89 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இன்று ஐபிஎல் 2018 போட்டிகளின் லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது.  இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.  டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி மள மள வென விக்கெட்டுகளை இழந்தது.  தற்போது 15.1 ஓவரில் அனத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.  அதை ஒட்டி பெங்களூர் அணிக்கு 89 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.