பெங்களூரு:

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 29வது லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கிறிஸ்கில்லின் அதிரடி ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி இந்த வெற்றியை தட்டிச்சென்றது.

நேற்று பெங்களூரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது.  டாஸ் வென்ற கொல்கத்தா, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதன் காரணமாக பெங்களூரு அணி மட்டையுடன் களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்,  மெக்கல்லம் களமிறங்கி தொடக்கத்திலேயே வெளுத்து வாங்கினர். இதன் காரணமாக போட்டி பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில், குல்தீப் யாதவ் போட்ட பந்தில் டி காக் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினாா்.

தொடர்ந்த கேப்டன் விராட் கோலி ஆரவாரத்துடன் மைதானத்துக்குள் புகுந்தார். ஆனால், அவருடன் இணையாக விளையாடிவர்கள் ஒவ்வொருவரும்  வந்த வேகத்திலேயே அவர் வெளியேறி, அதுவரை சிறப்பாக விளையாடி வந்த வந்த  மெக்கல்லமும் 38 ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினா்ா.

இதன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டம் தொய்வடைந்தது. தொடர்ந்து  கோலியுடன்  மன்திப் சிங் களத்தில் இறங்கினாா்.

பின்னா் கோலி தன்னுடைய ரன் வேட்டையை ஆரம்பித்தாா் இதன் மூலம்  தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்துக்கொண்டாா். மன்திப் சிங்கும் ரசூல் பந்தில் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பிய நிலையில் கிராண்ட ஹோம் மைதானத்துக்குள் வந்தார். கடைசியில் கோலியும்  68 ரன்னுடனும், கிராண்ட்ஹோமும் 11 ரன்னுடனும்  அவுட்டாகாமல் களத்தில் இருந்தனா்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175  ரன்களை சோ்த்தது. கொல்கத்தா அணி சாா்பாக பந்து வீசிய ஆந்த்ரே ரசூல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மட்டையை பிடித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி பந்துகளை  நாலாபுறமும் சிதறடித்தது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வந்தது.

இதன் விளைவாக 6.3-வது ஓவரில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்த போது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்ததும் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், சுனில் நரேன் (27 ரன்கள்) முருகன் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, கிறிஸ் லின்னுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து அணியின் ரன் வேகத்துக்கு உதவினர்.

இருப்பினும் மீண்டும் முருகன் அஸ்வின் சுழலில் சிக்கி உத்தப்பா 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.  தொடர்ந்து நிதிஷ் ராணா, கிறிஸ் லின்னுடன் இணைந்தார்.

இந்த சூழலில் முதுகுவலி காரணமாக நிதிஷ் ராணா (15 ரன்கள்) மைதானத்தை விட்டு வெளியேற, அதிரடி வீரர் ஆந்த்ரே ரசூல் களமிறங்கினார். ஆனால், அவர் வந்தவேகத்திலேயே முதல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் வெளியேற, கொல்கத்தா அணி 19.1-வது ஓவர்களில் வெற்றி இலக்கான 176 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 62 ரன்கள் எடுத்து கடைசி வரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணி சார்பாக முருகன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டு களை கைப்பற்றினர்.