பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 31வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில்  பெங்களூர் வெற்றி பெற்றது.

நேற்றைய லீக் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பெங்களுரு மட்டையுடன் மைதானத்திற்குள் களமிறங்கியது.

ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக்,  மனன் வோரா  களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே ஆட்டம் சோர்வாகவே சென்றது. 4வது ஓவரில் முப்பை அணி பவுலரின் டுமினியின் பந்தை  வோரா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து விளாசியதால் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த ஒரு ஓவரில் 22 ரன்களை எடுத்து பெங்களூரு அணி சாதனை படைத்தது.‘

ஆனால், அடுத்த  மெக்கிளேனகன் ஓவரில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மைதானத்தைவிட்டு வெளியேறினார். தொடர்ந்து மெக்கலம் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில், மார்க்கண்டே பந்தில் வோரா எல்பிடபிள்யு ஆகி 45 வது ரன்னின்போது  வெளியேறினார்.

அடுத்து மெக்கல்லம் உடன் கேப்டன்  விராட் கோலி ஜோடி இணைந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டது. இதன் காரணமாக ரன்னும் மளமளவென உயரத் தொடங்கியது.  14.3 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருக்கும்போது மெக்கல்லம் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து  ஹர்திக் பாண்டியா பந்துக்கு விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்த வெளியேற  முடிவில் 20 ஓவரில்  7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து ஆட வந்த  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம்இறங்கிய,  இஷான் கிஷான் 0(1) ரன் ஏதும் எடுக்காமல் செளத்தி வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து 9 ரன்னில்  சூர்யகுமார் யாதவும்,  கேப்டன் ரோகித் சர்மா  ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். அடுத்த வந்த பெல்லார்ட் 12 ரன்னில் வெளியேற,  டுமினியுடன் சேர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார்.

இருவரும் அதிரடியாக ஆட முயற்சித்தவேளையில், டுமினி 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்து  குர்ணால் பாண்ட்யா களமிறங்கினார். அவரும்  23  ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களை கடக்கும் போது செளத்தி பந்தில் கேட்ச் ஆனார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 14 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் சார்பில் உமேஷ் யாதவ், செளத்தி மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.