புனே,

ஐ.பி.எல். 17வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தன் ராயல் அணிக்கும் இடையே புனேவில் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற வேண்டிய போட்டி, காவிரி பிரச்சினை காரணமாக புனேவுக்கு மாற்றப்பட்டது.

நேற்றைய போட்டியில் வாட்சன், ரெய்னாவின்  அதிரடி ஆட்டம் காரணமாக ராஜஸ்தானை பந்தாடிய சிஎஸ்கே அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் தனது 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக சிஎஸ்கே மட்டையுடன் களமிறிங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக  ஷேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும்  களம் புகுந்தனர். ராஜஸ்தானி அணி வீரர் ஸ்டூவர்ட் பின்னிபந்து வீச தொடங்கினார்.  முதல் பாலையே வைடுக்கு அனுப்பிய ஸ்டுவர்ட், அடுத்தடுத்து வீசிய பந்தை வாட்சன் விளாச தொடங்கினார். இந்த நிலையில், அவரது பாலை கேட்ச் பிடிக்க வேண்டிய வாய்ப்பை ராஜஸ்தான் வீரர் திரிபாதி நழுவ விட்டதன் காரணமாக வாட்சன் தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

சதம் அடித்த வாட்சன்

ராயுடுவும் வாட்சனும்  தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இந்நிலையில் ராயுடு 12 ரன்கள் (8 பாலில் 2 பவுண்டரி) எடுத்த நிலையில் களத்தில் இருந்த வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கினார். வந்த வேகத்தில் பென் ஸ்டோக்சின் பந்தை  எதிர்கொண்டு,   ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களின் கரவொலில் தனது ஆட்டத்தை மீண்டும் நிரூபித்தார்.

இந்நிலையில், 9.5 ஓவரில் சிஎஸ்கே 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து 11.5வது ஓவரில் ரெய்னா  (29 பால், 46 ரன், 9 பவுண்டரி)  கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய தோனி , சாம் பில்லிங்ஸ் வந்த வேகத்திலேயே வெளியேற பிராவோ களத்தில் நின்று விளையாடினார். இந்நிலையில் வாட்சன் 100 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்)

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பிராவோ 24 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணியின்  சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால்  4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களத்தில் இறங்கியது. ஆனால் வந்த வேகத்தில், கிளாசென் (7 ரன்) வெளியேற, தொடந்து களமிறியங்கிய வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.  இறங்கிய சஞ்சு சாம்சன் (2 ரன்), கேப்டன் ரஹானே (16 ரன்) ஜோஸ் பட்லர் (22 ரன்), பென் ஸ்டோக்ஸ் (45 ரன்).

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி தாக்குபிடிக்க முடியாமல் துவண்டது.  18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியைடைந்தது.

நேற்று வெற்றி பெற்றதான் காரணமாக 3 வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே அணி.

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 36 வயதான ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல்  போட்டிகளில் நேற்று அடித்த 3வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக  கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில்  களமிறங்கினார். அதுபோல ஹர்பஜன் சிங், முரளி விஜய் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக கரண் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதுபோல ராஜஸ்தான் அணியில் டார்சி ஷார்ட், தவால் குல்கர்னி நீக்கப்பட்டு ஹென்ரிச் கிளாசென், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிஎஸ்கே அணிக்கும்  ஐதராபாத் சன்ரைசர்ஸ் இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் கிரிகெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.