டில்லி

பிஎல் 2018 போட்டிகளில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டில்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டில்லி

நேற்று ஐபிஎல் 2018 போட்டிகளின் லீக் ஆட்டம் டில்லியில் நடைபெற்றது.  இதில் டில்லி டேர் டெவில்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது   டாஸ் வென்ற டில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது.   ரிஷப் பண்ட் அடித்த 128 ரன்களினால் டில்லி அணி 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.   தவான் மற்றும் வில்லியம்சன் அதிகபட்சமாக முறையே 92 ரன்களும் 80 ரன்களும் எடுத்தனர்.   ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து டில்லி அணியை தோற்கடித்தது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த வெற்றியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.