ஐபிஎல் 2018: சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா துணை கேப்டன்

சென்னை:

2018ம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஆண்டுகள் தடை செய்யபட்டு இருந்ததால் ரெய்னா குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.

இது குறித்து ரெய்னா கூறுகையில், ‘‘டோனி கேப்டனாக இருப்பார். நான் துணை கேப்டன். ஜடேஜா 3-வது இடத்தில் இருப்பார். பின்னர் ஏலத்தில் சில வீரர்கள் எடுக்கப்படவுள்ளனர். சில முக்கிய தரமான இந்திய வீரர்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணியாக இருக்க வேண்டும். குஜராத்திற்கு இரண்டு ஆண்டுகள் நான் விளையாடியிருக்கிறேன். டோனி புனே அணிக்காக விளையாடினார். மேலும் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளில் விளையாடினார், பின்னர் நான் நிறைய உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறேன்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: IPL 2018: Suresh Raina is the vice captain of Chennai, ஐபிஎல் 2018: சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா துணை கேப்டன்
-=-