ஐபிஎல் 2018: சென்னையில் 20ந்தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு

சென்னை:

பிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், வரும் 20ந்தேதி சிஎஸ்கே- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற இருந்த போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை தொடங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது  , நாளை தொடங்க இருந்த டிக்கெட் விற்பனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகளின் காவிரி போராட்டத்துக்கு இடையே பயங்கர பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், ஏற்கனவேவே அறிவித்தபடி வரும்  20ந்தேதி, 28ந்தேதி, 30ந்தேதி ஆகிய தேதிகளிலும் அடுத்த மாதம் (மே)  5, 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 6 போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பி.சி.சி.ஐ. உயர்மட்ட குழு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் நாளை சென்னையில் நாளை தொடங்க இருந்த  டிக்கெட் விற்பனை  ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed