ஐபிஎல் 2019 : 3 வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

--

சென்னை

ரும் ஐ பி எல் 2019 போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணியில் இருந்து மூவரை நீக்கி உள்ளது.

வரும் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் 12 ஆவது போட்டிகள் நடைபெற உள்ளன. இதை ஒட்டி இந்த போட்டியின் அணிகள் தங்கள் அணி வீரர்கள் குறித்து ஆய்ந்து ஒரு சிலரை தக்க வைத்துக் கொள்கின்றன. அத்துடன் ஒரு சிலரை அணியை விட்டு வெளியேற்றுகின்றன.

இந்த ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டின் போட்டிகளில் முதலாவதாக வந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்த அணியின் தலைவர் தோணி ஆவார்.

இந்த அணியில் உள்ள வீரர்களில் 22 பேரை அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அத்துடன் மூன்று பேர் நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களான கனிஷ் சேத் மற்றும் ஹிதிஸ் சர்மா, மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க் உட் ஆகியோர் நீக்கம் செய்யப்படுள்ளனர்.