2019 ஐபிஎல்: தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம்!

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கிங்ஸ் லெவன் அணிக்கா ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் 346 வீரர்களின் பெயரை இறுதி பட்டியலில் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில் 9 வீரர்கள் மட்டுமே நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்து அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டனர்.

ipll

அதன்படி ரூ.20 லட்சம் அடிப்படை தொகையில் ஏலத்தில் இருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி கிங்ஸ் லெவன் அணிக்காக ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதேப்போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்தேவ் உனத்கத் ரூ.8.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார்.

அவர்களை தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சாம் கரண் ரூ.7.20 கோடிக்கும், டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக கோலின் இன்கிராம் ரூ.6.40 கோடிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மோகித் சர்மா ரூ.5 கோடிக்கும் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

அவர்களை விட குறைவாக அக்‌ஷர் படேல் ரூ.5 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும், கார்ல்ப்ப்ஸ் பிராத்வெயிட் ரூ. 5 கோடிக்கு கொல்கத்தா அணிக்கும், முகமது ஷமி பஞ்சாப் அணிக்கும், நிகோல்ஸ் பூரன் ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிக்காக
சிம்ரான் ஹெட்மயர் ரூ.4.20 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளனர். அவர்களில் 20 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்த வீரர்கள் அனைத்து அணிக்காகவும் மொத்தமாக ரூ.106.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.