ஐபிஎல் 2019: கோடிகளுக்கு ஏலம் போகும் வெஸ்ட் இன்டிஸ் வீரர்கள்

ஜெய்ப்பூர்:

லகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

ஏலம் முறையில் எடுக்கப்படும் இந்த நடைமுறைக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.  சுமார் 1003 பேர் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 346 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் 70 பேர் ஏலம் மூலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.

இதில் முன்னணி வீரர்களான  யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், பிரெண்டன் மெக்கல்லம், மிட்செல் ஸ்டார்க் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் யுவராஜ் சிங் உள்பட பல முன்னணி வீரர்கள் விலை போகிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியதும், முதல் வீரராக மனோஜ் திவாரி ஏலம் விடப்பட்டார். இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

டில்லி கேப்பிட்டல் அணிக்காக ஹனுமந்த் விஹாரி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் வெஸ்ட் இன்டிஸ் அணியின் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வெஸ்ட் இன்டிஸ் பிளேயர்  சிம்ரன் ஹெட்மயர் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போனார்.

விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அக்சார் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

பிராத்வைட்டை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்

முன்னணி வீரர்கள் பலர் விலை போகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.