சென்னை

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணையை மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஓய்பில் இருக்கும் தோனி, ஜடேஜா, டு பிளெஸ்ஸி கலந்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு பதில் சாண்ட்னர், துருவ் ஷோரி மற்றும் முரளி விஜய் விளையாடினார்கள். அணியின் நேற்றைய தலைவராக சுரேஷ் ரெய்னா இருந்தார்.

பேட்டிங்கில் இறங்கிய மும்பை அணி தொடக்க வீரரான டி காக் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து விளையாடிய ரோகித் மற்றும் லூயிஸ் அணி இரண்டாம் விக்கட்டை 75 ரன் இழந்தது. அவுட் ஆன லூயிஸ் 32 ரன்கள் எடுத்திருந்தார். குருணல் பாண்டியா 1 ரன் மட்டுமே எடுத்தார். ரோகித் 67 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 156 ரன்கள் நிர்ணையிக்கப்பட்டது.

சென்ன அணியின் வாட்சன், ரெய்னா, ராயுடு, ஜாதவ் என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் ராயுடு ஒரு ரன் கூட எடுக்கவில்லை. முரளி விஜய் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். செனை அணி 17.4 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கட்டுகலையும் இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.