6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே தனது 2வது வெற்றியை பதிவு செய்தது

டில்லி:

148 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 19.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

நேற்று இரவு  டெல்லி பெரோஸ்ஷா கோட்லா  மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 148 ரன்களை சிஎஸ்கே அணிக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது.

அதைத்தொடர்ந்து பேட்டுன் கறமிறங்கிய சென்னையின் இதனையடுத்து இரண்டாவதாக பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 19.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் ராயுடு, இஷாந்த் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.  அதிரடியாக ஆடிய வாட்சன் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 44 ரன்களை எடுத்தபோது, மிஸ்ரா பந்தில் அவரும் வெளியேறினார்.

இதையடுத்து சின்னத்தல என்று அன்போடு அழைக்கப்படும்  சுரேஷ் ரெய்னா ரசிகர்களின் ஆரவாரங்களுடன்  களமிறங்கினார். அவரும் 1 சிக்ஸர், 4 பவுண்டரி என விளாசிய நிலையில், மிஸ்ராவின் பந்து வீச்சி  30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

தொடர்ந்து தல தோனி களமிறங்கினார். அவருடன்  கேதார் ஜாதப் இணைந்து நிதானமாக ஆட்டத்தை எதிர்கொணடனர்.  , கீமா போல் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஜாதவ்- அவர் 27 ரன்கள் எடுத்திருந்தார்.  1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 32 ரன்களுடன் தோனியும், 4 ரன்களுடன் பிரவோவும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனி வழக்கம் போல் இறுதியில் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர் ஒன்றை அடித்தார். பிரவோ அடித்த பவுண்டரி வெற்றிக்கு வித்திட்டது. 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து வென்றது சென்னை.

டெல்லி அணி ல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 2-35, இஷாந்த், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.