ஐபிஎல் 2019: டெல்லி அணியின் ரிஷபந் பன்ட் அதிரடி ஆட்டம்: மும்பைக்கு 214 ரன் இலக்கு

மும்பை:

டெல்லி கேப்பிடல் அணியின் வீரர் ரிஷபந் பன்டின் அதிர ஆட்டம் காரணமாக டெல்லி அணி,  213 ரன் எடுத்து. இதையடுது மும்பை அணிக்கு 214 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது போட்டி இன்று, 2 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல்  மாலை 4 மணிக்கு கொல்கத்தா வில்  சன் ரைசர்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் நடைபெற்று முடிந்த நிலையில், 3வது போட்டி தற்போது  மும்பை வான்கடே  மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும்  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகின்றன.

மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, பொல்லார்ட், பாண்ட்யா பிரதர்ஸ், டி காக், இஷான் கிஷன் என்ற நட்சத்திர பட்டாளமே அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். முதல் 6 ஆட்டங்களில் மலிங்கா விளையாடமாட்டார் என்பது அந்த அணிக்கு பின்னடைவே. 6-ஆவது ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்த யுவராஜ் சிங் எப்படி விளையாடபோகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்களை கொண்டு விளையாடி வரும் டெல்லி அணி இம்முறை  ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ என்ற பெயருடன் களமிறங்குகிறது. இந்த பெயர் மாற்றத்துக்கு பலன் கிடைக்குமா? என்பது ஐபிஎல் இறுதியில்தான் தெரிய வரும். இந்த வருடம்,  ஷிகர் தவான் டெல்லி அணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம்.

இந்த நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்ந்து செய்தது. இதன் காரணமாக டெல்லி அணி பேட்டுடன் களத்தில் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், பிரித்விஷாவும் களமிறங்கினர்.  7ரன்னில் பிரித்விஷா வெளியே  ஷிகர் தவான் தொடர்ந்து ஆடினார். அவருக்கு ஜோடியாக பொலார்டு கைகொடுத்தார். ஆனால் ஷிகர் தவான் 36 பந்துக்கு 43 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் வெளியேற அடுத்து கொலின் இங்ராம் இறங்கினார். இவர் நிதானமாக ஆடி வந்த நிலையில் 16 ரன்னில் பொலார்டும் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இளம்வீரரான ரிஷபந்த் பன்ட் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கிய பன்ட்,  தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசினார். இந்த நிலையில் கொலின் 32 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதையடுத்து கீமோ பால் வந்தார். ஆனால் அவர் வந்த வேகத்தில் 3 ரன்னுடன் வெளியேற, அஷார் பட்டேல் வந்தார். அவரும் 4 ரன்னில் களத்தை விட்டு வெளியேற ராகுல் திவேதியா களமிறங்கினார்.

ரிஷபந்த் பன்ட், ராகுல் ஜோடி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை காண்பித்தது. ரிஷபந்த் பன்ட் அதிரடியாக ஆடி மளமள வென ஸ்கோரை உயர்த்தினார். அவர் 27 பாலில் 78 ரன் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அதுபோல ராகுல் 4ரன்னில் 6 ரன்களை எடுத்தார்.  கடைசி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் தொடர்ந்த நிலையில், 20 ஓவர் முடிவில் 213 ரன் எடுத்து சாதனை படைத்தனர். , 214 ரன் வெற்றி இலக்கை முப்பைக்கு டெல்லி அணி  நிர்ணயித்து உள்ளது.