ஐபிஎல்2019: சிஎஸ்கேவுக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்த டில்லி

டில்லி:

பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு டில்லி கேப்பிடல் அணி 148 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்த ஆண்டின் ஐபிஎல் 12-வது சீசனின் 5வது லீக் ஆட்டம் தலைநகர் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகின்றன.  டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக  பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் களத்தில் இறங்கினர். பிரித்வி ஷா 16 பந்தில் 5 பவுண்டரி விளாசிய நிலையில்,  24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய  ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ரிஷப் பந்த் இறங்கினார்.

ரிஷப்பந்த்-தும் வந்த வேகத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என்று விளாசிய நிலையில், தாஹிரின் பந்துவீச்சில் பிரோவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர், 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து களமிறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில்,  விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன, தவான் மட்டும் அசராமல் நிதானமாக ஆடிந் வந்து அரை சதம் அடித்த நிலையில், 51 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து, .டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே அணிக்கு வெற்றி இலக்கு 148 ரன்களை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், சாஹர், தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.