ஐதராபாத்:

ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடி யத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடை பெற்றது.

சிஎஸ்கே பவுலர்கள் தாஹீர், சாஹர், தாகூர் ஆகியோரின் அசத்தலான பந்து வீச்சு காரணமாகவே மும்பை அணியை சிஎஸ்கே அணி 149 ரன்னில் முடக்கியது.

பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை வீரர்கள் மட்டையுடன் மைதானத்துக்குள் இறங்க சிஎஸ்கே வீரர்கள் பந்து வீச தயாரானார்கள்.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கரர்களாக அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினார். முதல் ஓவர் நிதானமாக தொடங்கிய நிலையில் 2வது  ஓவரை அதிரடியாக ஆடத்தொடங்கினார். 1.5 ஓவரில் ரோகித் முதல் சிக்சரை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். இதனால் ஆட்டம் சூடுபிடித்தது. தொடர்ந்து 3வது ஓவரில் டிகாக் அதிரடியாக ஆடத்தொடங்கினார். இந்த ஓவரில் 4 டிசிக்சர் அடித்து அசத்தினர்.

4வது ஓவர் தொடங்கியது. மீண்டும் தாகூர் பந்துவீச தொடங்கினார். அவரின் முதல் பந்தில் டிகாக் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 45 இருந்த நிலையில், 17 பந்தில் 29 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 5.2 ஓவரில் கேப்டன் ரோகித்தும் வெளியேறினார். சாஹர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்த ரோகித், 14 பந்தில் ஒரு சிக்சர், 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

தொடர்ந்து சூர்யகுமார், இஷான் கிஷன் ஜோடி நிதானமாக  ஆடியது. அணியின் ஸ்கோர் 11.2 ஓவரில் 82 ரன்னில் சூர்யகுமார் தாஹிர் பந்துவீச்சில் போல்டானார். சூர்யகுமார் 17 பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

அதையடுத்து குருணால் பான்ட்யா களமிறங்கினார்.  அவர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்திருந்த நிலையில், தாகூரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

தொடர்ந்து கிஷானுக்கு தோள்கொடுக்க பொல்லார்டு களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 12.3 ஓவரில் 84ஆக இருந்த நிலையில் 4வது விக்கெட்டாக குருணால் பான்ட்யா தாகூர் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து ஹர்திக் பான்ட்யா களமிறங்கினார்.  அணியின் ஸ்கோர் 14.4 ஓவரில் இஷான் கிஷான் 23 ரன்னில் தாஹிர் பந்து வீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அவர் 10 பந்தில் ஒரு சிக்சர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

தொடர்ந்து ராகுல் சாஹர் களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே 18.4 ஓவரில் 140 ரன்னில் 7 வது விக்கெட்டாக சாஹர் பந்தில், டுபிளசிஸ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் காரணமாக  மும்பை ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.

இந்த நிலையில், மெக்லானகன் களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே ரன் அவுட்டாகி வெளியே மைதானத்தில் விசில் பறந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 141 ஆக இருந்தது.

கடைசி 2 பால் மட்டுமே இருக்கும் நிலையில் பொல்லார்டு அதிரடியாக ஆட பவுண்டரியை நோக்கி ஓடியது. பொல்லார்டு 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 149 ரன் எடுத்தது.

சிஎஸ்கே அணிக்கு 150 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சிஎஸ்கே வெற்றி பெறுமா? இன்னும் 1 மணி நேரம் காத்திருங்கள்… பார்க்கலாம்…