ஐபிஎல்2019 இறுதிப்போட்டி: சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை

‘ஐதராபாத்:

ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக 4வது முறையாக மும்பை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

இன்றைய ஆட்டம்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை  இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பைஅணி கேட்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது.

ஆனால், சிஎஸ்கே பவுலர்கள் தாஹீர், சாஹர், தாகூர் ஆகியோரின் தங்களது பந்து வீச்சு காரணமாக மும்பை வீரர்கள் ரன்கள் எடுப்பதை தடுத்தனர். இதனால் மும்பை அணி 149 ரன்னி முடக்கப்பட்டது. இதன் காரணமாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிஎஸ்கே களத்தில் புகுந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டுபிளசிஸ் களமிறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 2வது ஓவரில் டுபிளசிஸ் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கி னார். அந்த ஒரு ஓவரில் முதல் 5 பாலில் 2 பவுண்டரி 1 சிக்சர் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 6வது பந்துக்கு க்ருணால் பான்ட்யா பந்தில் போல்டாகி வெளியேறினார். டுபிளசிஸ் 13 பந்தில் 26ரன்கள் எடுத்திருந்தார். அப்போது 3 ஓவருக்கு சிஎஸ்கே அணி 34 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஆர்ப்பாட்டமாக களமிறங்கினார். அவரும் வாட்சனும் இணைந்து நிதானமான ஆட்டத்தை தொடர்ந்து 6வது ஓவர் பவர் பிளே முடிவடையும் போது அணியின் ஸ்கோர், 53 ரன்கள் எடுத்திருந்தது.

சின்னதல என்று அன்போடு அழைக்கப்படும் ரெய்னா கடந்த சில ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததைப் போலவே இன்றைய ஆட்டத்திலும் சோபிக்க தவறினார். பந்தை சும்மா தட்டி தட்டி வந்த நிலையில், ரெய்னாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கடுப்பாகினர். 10வது ஓவரில் அணியின் ஸ்கோர் 72 ஆக இறந்த நிலையில் ரெய்னா போல்டாகி வெளியேறினார். அவர் 14 பந்தில் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து வாட்சனுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக 4வது பந்தில் 1 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், பும்ராவின் பந்துக்க டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பரபரப்பாக போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் தொடர்ந்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து தல தோனி களமிறங்கினார். ஆனால் பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் தோனி ரன்அவுட்டாகி வெளியேறினார். தோனியின் ரன் அவுட் சர்ச்சையான நிலையில், 3வது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது. அதிலும் அவுட் என வரவே தோனியே களத்தை விட்டு வெளியேறினார். அவர் 8 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது அணியின் ஸ்கோர் 12.5 ஓவரில் 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்த நிலையில், பிராவோ களமிறங்கினார். ஆட்டம் நிதானமுடன் நடைபெற்று வந்த நிலையில் மலிங்காவின் மந்தை சுழற்றத் தொடங்கினார். தொடர்ந்து  15.1 பந்தில் பிராவோ 6 அடிக்க, அடுத்து  15.3 மற்றும் 15.4வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு அடிக்க ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. வாட்சன் தனது அரை சதத்தை தாண்டினார்.

16வது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 108 ஆக இருந்தது. வெற்றி பெற மீதமுள்ள 24 பந்தில் 42 ரன்கள் தேவையுள்ள நிலையில் ஆட்டம் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. 17வது ஓவரில் க்ருணால் பான்ட்யா பந்தை  வாட்சன் தொடர்ந்து 3 சிக்சரை விரட்ட சிஎஸ்கே வீரர்கள் பலத்த கரகோஷத்துடன் சத்தமிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 18வது ஓவர் முடிவில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 132 ரன்கள் எடுத்திருந்தது.

மீதமுள்ள 2 ஓவரில் அதாவத 12 பந்தில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே கடும் நெருக்கடியை சந்தித்தது. 19ஓவரை பும்ரா வீச முதல் பந்திலேயே பிராவோ அவுட்டாகி வெளியேற பரபரப்பு நிலவியது. பிராவோ 15 பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

அதையடுத்து, ஜடேஜா களமிறங்கினார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. பும்ரா பந்தில் ரன் எடுக்க முடியாமல் வாட்சனும் ஜடேஜாவும் தடுமாறினர். கடைசி பால் பவுண்டரிக்கு செல்ல 19வது ஓவரி முடிவில் அணியின் ஸ்கோர் 141ஆக இருந்தது.

கடைசி ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பரபரப்பு நிலவியது.

20வது ஓவரை மலிங்கா வீச 19.1 ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், 19.2 ஓவரிலும் 1 ரன்கள் மட்டுமே எடுக்க கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கையில் விளிம்பில் உட்கார்ந்து பரபரப் பாக ஆட்டத்தை உற்றுநோக்கி வந்தனர். 19.3 ஓவரில் 2ரன்கள் எடுத்த நிலையில் கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

19.4 ஓவரில் 6வாட்சன் ரன்அவுட்டாக சிஎஸ்கே ரசிகர்கள் சோகமயமாயினர். ஷேன் வாட்சன் 59 பந்தில் 4 பவுண்டரிகள் 8 சிச்சருடன் 80 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார்.

சிஎஸ்கே வெற்றிக்கு   2 பாலில் 4 ரன்கள் தேவையுள்ள நிலையில்,  19.5 ஓவரில் 2 ரன்கள் எடுத்தனர். கடைசி பாலில் 2 ரன்கள் தேவையான நிலையில்,  மலிங்காவின் பந்தில் தாகூர் எல்பிடபிள்யுவாக  மும்பை அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் தோனி, ரெய்னா ஆகியோரின் ஆட்டம் குறிப்பிடத்தகுந்த முறையில் இல்லாததும் சிஎஸ்கே அணியின் தோல்வி மற்றுமொரு காரணம்.

முன்னதாக மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கரர்களாக அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினார்.  2வது  ஓவர் முதல்வர்கள் அவர்கள் அதிரடி ஆட்டத்தை காட்ட,  அணியின் ஸ்கோர் 45 இருந்த நிலையில் டிகாக் வெளியேறினார். அவர்  17 பந்தில் 29 ரன் எடுத்திருந்தார்.  அவரைத் தொடர்ந்து 5.2 ஓவரில் சாஹர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்த ரோகித், 14 பந்தில் ஒரு சிக்சர், 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கேப்டன் ரோகித்தும் வெளியேறினார்.  தொடர்ந்து களமிறங்கிய  சூர்யகுமார், இஷான் கிஷன் ஜோடி நிதானமாக  ஆடியது. அணியின் ஸ்கோர் 11.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த நிலையில்,தாஹிர் பந்துவீச்சில் சூர்யகுமார் போல்டானார்.

அதையடுத்து குருணால் பான்ட்யா களமிறங்கினார்.  அவரும் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த  நிலையில், தாகூரின் பந்து வீச்சில்  கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.  தொடர்ந்து பொல்லார்டு களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 12.3 ஓவரில் 84ஆக இருந்த நிலையில் குருணால் பான்ட்யா வெளியேற, 14.4 ஓவரில் இஷான் கிஷான் 23 ரன்னில் தாஹிர் பந்து வீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து களத்தை விட்டு வெளியேறினார்

தொடர்ந்து ராகுல் சாஹர் களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே வெளியேற மெக்லானகன் களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே ரன் அவுட்டாகி வெளியேற மும்பை அணி தடுமாறியது. கடைசி 2 பால் மட்டுமே இருக்கும் நிலையில் பொல்லார்டு அதிரடியாக  கடைசி 2 பந்தில் 2 பவுண்டரியை அடித்து,  மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன் எடுத்தது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CSK, IPL 2019:, IPL2019 FINAL, MI, MI WINS
-=-