ஐபிஎல் 2019 : கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி

நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நேற்று மொகாலியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாசில் வென்றது. அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை ஒட்டி பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது

தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் களம் இறங்கினர்.ஆட்டம் தொடக்கம் முதலே ஆட்டம் கண்டது. கொல்கத்தா பவுலர் சந்தீப் வாரியர் பந்துக்களை அடிக்க முடியாமல் சொதப்பினர். ராகுல் 7 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, தொடர்ந்து கிறிஸ் கெய்ல் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து, 3-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் உடன் வெஸ்ட்இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். பூரன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஸ்கோரும் கணிசமாக உயர்த்தொடங்கியது

பஞ்சாப் அணி 91 ரன்கள் எடுத்திருக்கும்போது 48 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் வெளியேறினார். அவர் 27 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்அடித்திருந்தார். அதன்பின் மந்தீப் சிங் களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 111 ரன்னாக இருக்கும்போது மயாங்க் அகர்வால் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 5-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 17.3 ஓவரில் 149 ரன்னாக இருக்கும்போது மந்தீப் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

6-வது விக்கெட்டுக்கு சாம் குர்ரான் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.சாம் குர்ரான அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாச கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்குவிளாசினார். சாம் குர்னான் 23 பந்தில் தனது முதல் அரைசத்தை பூர்த்தி செய்தார். சாம் குர்ரான் 24 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் இறங்கியது

தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் லின், உஸ்மான் கில் இறங்கினர். சிறப்பாக ஆடிவந்த இந்த ஜோடி, முதல் 6 ஓவரில் 62 ரன்கள் எடுத்த நிலையில், கிரிஸ்லின் வெளியேறினார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரிகளும் 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுத்திருந்தார்.தொடர்ந்து உத்தப்பா முருகன் அஸ்வின் பந்தை விளாசிய நிலையில், பின்னர் அஸ்வினின் பந்துக்கே வெளியேறினார். உத்தப்பா 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சுடன் 22 ரன்கள் எடுத்தார். அதையடுத்த உஸ்மான் கில் உடன் ரஸல் ஜோடி சேர்ந்ததார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

உஸ்மான் கில் 37 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். ரஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து போது வெளியேறினார். 15 ஓவர்களில் கொல்கத்தா அணி 151 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.இதனையடுத்து உஸ்மான் கில்லுடன் கேப்டன் தினேஷ் கார்த்தி ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. உஸ்மான் கில் 49 பந்துகளில் 65 ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.பஞ்சாப் தரப்பில் அஸ்வின், டை, முகமது சமி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

இந்த அணி 18 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தன. இதை ஒட்டி கொல்கத்தா அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்ட நாயகனாக சுபம் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கார்ட்டூன் கேலரி