ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா முதல் 6 ஆட்டங்களில் ஆட மாட்டார்….

மும்பை :

பிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட இலங்கை  வீரர் லசித் மலிங்கா உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட இருப்பதால், முதல் சில வாரங்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் விளையாடும் 6 போட்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் மலிங்கா, உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறார். இதற்க இலங்கையில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கிடையில் ஐபிஎல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மலிங்கா,  இலங்கை கிரிக்கெட் போர்டிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார்.

அதற்கு, உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும் என்றால் உள்ளூர் ஒருநாள் தொடரில் ஆட வேண்டியது கட்டாயம் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை  இலங்கையில் நடைபெறும் போட்டியில் மலிங்கா ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தன்னல் ஐபிஎல் தொடரில்சில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்று மும்பைஇந்தியன்ஸ் நிர்வாகததில் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed