ஐபிஎல் 2019: 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்:

பில் தொடரின்  4வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய  பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் போட்டி நேற்று இரவு ஜெயப்பூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.  20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். சர்ஃப்ராஸ் கான் 46 ரன்கள், மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து  185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  ராஜஸ்தான் அணி சார்பில் ரஹானே 27 ரன்கள், ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள், சாம்சன் 30 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்கள் எடுத்தனர்.

இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றது.