ஐபிஎல் 2019: வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று ஆரம்பம்….

ஜெய்ப்பூர்:

லகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், 2019ம் ஆண்டுக்னான  ஐபிஎல் போட்டி 2019ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சமயத்தில் இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் இருப்ப தால், 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வளைகுடா நாடுகளில் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால் இதுவரை போட்டி நடைபெறும் தேதி, இடம் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று ஐபிஎல் 12வது போட்டிக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  தோனி உள்பட முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெற உள்ள ஏலப்போட்டியில் கலந்துகொள்வதாக உலக நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களை  பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று  ஏலம் ஆரம்பமாகிறது.  இந்த ஏலப் போட்டியில் எந்த வீரர்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறார்கள் என்பது தெரிய வரும்.

இந்த தடவை ஏலத்திற்கு பெரும்பான்மையான ஐபிஎல்  அணிகள், தங்களது முன்னணி வீரர்களை விடுவிக்காததால், குறைந்த அளவிலான வீரர்கள் மட்டுமே ஏலத்தில் மூலம் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்துக்கு  347 வீரர்களை கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில்,  226 பேர் இந்திய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் அதிக விலைக்கு ஏலம் போன இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டிற்கு அடிப்படை விலையாக ரூபாய் 1.5 கோடியும், யுவராஜ் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூபாய் 1 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் விவரம் பின்வருமாறு:

இலங்கை

இலங்கை சார்பில் மொத்தம் 7 வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் அதிகபட்ச மாக மலிங்கா மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளிலிருந்து தலா 2 வீரர்களும், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா சார்பில் மொத்தம் 26 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்களில் காலின் இங்கிரம் (ரூ.2 கோடி), மோர்னே மார்கல் (ரூ. 1.5 கோடி), ஸ்டெயின்(ரூ. 1.5 கோடி), ரோஸவ்(ரூ. 1.5 கோடி), ஆம்லா(ரூ.1 கோடி) மற்றும் டுமினி (ரூ.1 கோடி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியா சார்பில் மொத்தம் 23 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் ஷான் மார்ஷ் (ரூ. 2 கோடி), டேர்சி ஷார்ட் (ரூ. 2 கோடி),  ஜேம்ஸ் பாக்னர் (ரூ. 1.5 கோடி), அலெக்ஸ் கேரி (ரூ. 1.5 கோடி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வெஸ்ட்இண்டீஸ் 

வெஸ்ட் இண்டீஸ் சார்பாக மொத்தம் 18 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  இவர்களில் பராத்வெயிட் (ரூ. 75 லட்சம்), பூரன் (ரூ. 75 லட்சம்), ஹோல்டர்
(ரூ. 75 லட்சம்), டேரன் பிரவோ (ரூ. 75 லட்சம்) , சிம்மன்ஸ் (ரூ. 75 லட்சம்), வெய்ன் ஸ்மித் (ரூ. 75 லட்சம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து சார்பில் மொத்தம் 18 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் கிறிஸ் வோக்ஸ் , சாம் கர்ரன் ஆகியோருக்கு அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து

நியூஸிலாந்து சார்பில் மொத்தம் 13 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக பிரண்டென் மெக்கல்லம் மற்றும் கோரி ஆண்டர்சன் ஆகியோருக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் சார்பில் மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக  ஹஸரத்துல்லா ஷாஷாய் மற்றும் சபியுல்லா ஷபிக் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.