ஐபிஎல் 2019 : வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள்

சென்னை

ன்று ஐபிஎல் போட்டிகளின் முதல் தகுதிச் சுற்றை முன்னிட்டு வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் 2019 போட்டிகளின் முதல் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியைக் காண நகரெங்கும் இருந்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே வேளச்சேரி – கடற்கரை மார்க்கத்தில் இன்று இரவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.25 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் இயங்க உள்ளது. அதைப்போல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 11.45 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் இயங்க உள்ளது.

கார்ட்டூன் கேலரி