சென்னை:

பில் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில், தமிழகத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணி மோதுகிறது.

இரு அணிகளுமே தமிழர்களின் இரு கண்கள் போன்றது. இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. மண்ணின் மைந்தன் அஸ்வின் தலைமையிலான அணி வெற்றி பெறுமா அல்லது தமிழகமே விசில் போடும் தோனி தலைமை வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டியை காண சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில்,  நடப்பு சாம்பியன் சென்னை அணி முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிஎஸ்கே வீரர்கள் வாட்சன், ராயுடு போன்றவர்களிடம் இருந்து இன்னும் திறமையான ஆட்டம் வெளிப்படவில்லை என்பது சோகமாகும். ரெய்னா, தோனியை மட்டுமே நம்பி உள்ளது  சிஎஸ்கே அணி. அதுபோல சிஎஸ்கெ அணி பவுலிங்கிலும் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இம்ரான் தாகிர்,  ஜடேஜா, ஷர்துல் தாகூர் இருந்தாலும், இந்த போட்டியில் பிராவோ இல்லாதது பின்னடைவே.

அதேவேளையில் சிஎஸ்கேவை எதிர்த்து ஆடும் பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 4 போட்டியில், 3ல் வெற்றிபெற்று 2வது இடத்தில் உள்ளது. அங்கும் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்பராஸ் கான், மன்தீப் சிங் என அதிரடி வீரர்கள் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் கெயிலும் களமிறங்குகிறார். அவரது அதிரடி ஆட்டம் சென்னையில்  எடுபடுமா என்பது இன்று மாலை தெரி யும். பவுலிங்கில் அஸ்வின் மிரட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடன் முஜீப்புர்  ரஹ்மான், முகமது ஷமி, கர்ரான், ஆன்ட்ரூ டை கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

இன்றைய போட்டியில் பஞ்சாபி அணியில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி களமிறங்க உள்ளார்.  சொந்தமண்ணில் அவரது ஆட்டம் எப்படி என்பது இன்று தெரிய வரும்.

ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரராக இருந்து வந்த அஸ்வின்கடந்த 2018ம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தின்போது, அவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.