ஐ பி எல் 2019 இந்தியாவிலேயே நடைபெறும் : தொடக்க தேதி அறிவிப்பு

மும்பை

பி எல் 2019 தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 23 முதல் தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐ பி எல் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது வழக்கம். இந்த வருட போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஏற்கனவே முடிந்து அணிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வருடம் ஐ பி எல் தொடர் போட்டிகள் நடைபெறும் அதே சமயம் மக்களவை தேர்தலும் நடைபெற உள்ளது. கடந்த 2009 மற்றும் 2014 ஆம் வருடமும் இதே நிலை ஏற்பட்டது.

அந்த இரு சமயமும் ஐ பி எல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாமல் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதைப் போலவே இந்த வருடமும் ஐ பி எல் போட்டிகளை தென் ஆப்பிரிக்க அல்லது அரபு அமீரகம் உளிட்ட நாடுகளில் நடத்தவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்தது. இதனால் இந்திய கிரிகெட் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வருடத்துக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் மார்ச் 23 அன்று தொடங்கி இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளது. எந்தெந்த இடங்களில் எந்தெந்த தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என்பது குறித்த அட்டவணை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி