ஐபிஎல் ஏலத்தின் இறுதி பட்டியலில் 346 வீரர்களின் பெயர்கள் தேர்வு

ஐபிஎல் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் 346 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

trophy

12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்காக வீரர்களின் ஏலம் இம்மாதம் 18ம் தேதி நடக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்க ஆயிரம் வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யபப்ட்டன. இதில் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களின் பெயர்களை அணியின் நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.

அதன்படி மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாக இன்று வெளியிட்டுள்ளது. இதில் 70 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நியூசிலாந்து வீரர்கள் மெக்கல்லம், ஆண்டர்சன், இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன், இலங்கை வீரர்கள் மலிங்கா, மேத்யூஸ், ஆஸ்திரேலிய வீரர்கள் ஷான் மார்ஷ், டார்சி ஷார்ட், தென் ஆப்பிரிக்க வீரர் காலின் இங்ராம் உள்ளிட்ட 9 வீரர்களின் அடிப்படை ஏலத்தி விலை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளாது. இந்த அளவிற்கு வேறு எந்த வீரர்களின் விலையும் நிர்ணயிக்கவில்லை.

ipl

அதேபோல், கடந்த ஆண்டு ரூ.11.5 கோடிக்கு விலை போன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் தற்போது ஒன்றரை கோடிக்கு அடிப்படை விலையைப் பெற்றுள்ளார். இவர் மட்டுமின்றி, மோர்னே மோர்கல், ஸ்டெயின், பேர்ஸ்டோ ஆகியோர் ஒன்றரை கோடிக்கு அடிப்படை விலையை பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர்த்து இந்திய வீரர்கள் முகமது ஷமி, யுவராஜ் சிங், தென் ஆப்பிரிக்கா வீர்ர் டுமினி, விருத்திமான் சஹா, அம்லா நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு ரூ.1 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ப்ந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு ரூ.75 லட்சமும், ஹெட்மயருக்கு ரூ.50 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.