ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

துபாய்: ஐபிஎல் தொடரின் இதுவரையான புள்ளிப் பட்டியலில், டெல்லி அணி முதலிடத்தில் நீடித்திருக்க, கோலியின் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன. 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது மும்பை அணி. கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது.

இன்றையப் போட்டியில் வென்றதன் மூலம், ஐதராபாத் அணி 8 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும், அதே 8 புள்ளிகளுடன் ஆறாவது மற்றும் ஏழாமிடத்தில் இருக்க, 6 புள்ளிகளுடன் ஹாயாக கடைசி இடத்தில் அமர்ந்துள்ளது கிங் தோனியின் சென்னை அணி.