ஐபில்2020: நாளை துபாய் பறக்கிறது சிஎஸ்கே…

சென்னை: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தில் கலந்துகொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாளை துபாய் பயணமாகின்றனர்.

கொரோனா தொற்று பரவல்  அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து,  இந்த ஆண்டுக்கான  ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 19ம் தேதி போட்டி தொடங்கி நவம்பர் 10ம் தேதி முடிவடைய உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, போட்டியில் கலந்துகொள்ளும் ஐபிஎல் அணி வீரர்கள் துபாய்க்கு பயணமாகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.