ஐபிஎல் 2020 – கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன மும்பை – ஐதராபாத் அணிகள்

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில், மும்பையுடன் மோதுகிறது ஐதராபாத் அணி.

ஷார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்குகிறது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதியப் போட்டியில், மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

இன்றையப் போட்டியில், ஐதராபாத் அணி பெரிய வித்தியாசத்தில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறலாம்.

மும்பை அணி ஏற்கனவே 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முதல் ஆளாக தகுதிபெற்றுவிட்டது. டெல்லி அணியும் தனது இடத்தை உறுதிசெய்துவிட்டது. பெங்களூரு அணிக்கு இடம் கன்ஃபார்ம்.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்துதான், பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதிபெறுவது ஐதராபாத்தா அல்லது கொல்கத்தாவா என்பது முடிவாகும்.

இன்று லீக் போட்டிகள் முடிவடைவதையடுத்து, வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதிவரை பிளே ஆஃப் போட்டிகள் நடக்கின்றன.