ஐபிஎல் தொடர் – விக்கெட்டுகளை தொடர்ந்து அள்ளும் டெல்லியின் ரபாடா

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 23 விக்கெட்டுகளை அள்ளி முதலிடம் வகிக்கிறார் டெல்லி அணியின் ரபாடா.

மொத்தம் 11 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ரபாடா. அவருக்கடுத்து 10 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் மும்பையின் பும்ரா.

அதே 17 விக்கெட்டுகளை பஞ்சாபின் முகமது ஷமி கைப்பற்றியிருந்தாலும், அவர் 11 போட்டிகளை எடுத்துக்கொண்டதால் மூன்றாமிடத்தில் உள்ளார்.

மும்பையின் பெளல்ட் 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து நான்காமிடத்தில் உள்ளார். ராஜஸ்தானின் ஆர்ச்சர் 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து ஐந்தாமிடத்தில் உள்ளார்.