ஐபிஎல்2020: பஞ்சாபில் இருந்து வெளியேற்றப்பட்ட அஸ்வினை அணைத்துக்கொண்டது டில்லி!

டில்லி:

மிழகத்தைச் சேர்ந்த பிரபல பவுலரான அஸ்வின் ரவிச்சந்திரனை ஐபிஎல் போட்டியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தூக்கிய நிலையில், டெல்லி அணி அவரை எடுத்துக்கொண்டது.

இதுவரை ஐபிஎல் 12 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.  சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் வெற்றிக்கோப்பைகளை பெற்றுள்ள நிலையில்,  ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. கோச் மற்றும் வீரர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெங்களூர் அணி (ஆர்சிபி) தலைமை பயிற்சியாளர்களை மாற்றி புதிய பயிற்சியாளர்களாக  சைமன் கேடிச்சையும் இயக்குநராக மைக் ஹெசனையும் நியமித்துள்ளது.

அதுபோல  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சில மாற்றங்களை செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினை முற்றிலுமாக தூக்கி உள்ளது. இவர் கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றி வந்தார்.

பஞ்சாபில் இருந்து  வெளியேற்றப்பட்ட அஸ்விணை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாரி அணைத்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அஸ்வின் டெல்லியில் அணியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனின்போது, டெல்லி அணியின் ஆலோசகராக  கங்குலி நியமிக்கப்பட்டருந்தார். அதன்காரணமாக டெல்லி பிளேஆஃப் சுற்றுவரை முன்னேறியது. இந்த நிலையில், தற்போது அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளது டெல்லியின் பலத்தை மேலும் கூட்டும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

2017 ஐபிஎல் சீசனில் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.8 கோடிக்கு எடுத்தது. இருந்தாலும், ஐபிஎல் போட்டிகிளில் பஞ்சாப் அணி சோபிக்க முடியாத நிலையில், தற்போது அவரை கழற்றிவிட்டுள்ளது பஞ்சாப்.

You may have missed