இன்று ஐ பி எல் 2020 தொடர் தொடக்கம் : சென்னை மும்பை அணிகள் மோதல்

புதாபி

ன்று அபுதாபியில் தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் முதலாவதாக சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ஐ பி எல் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது.   ஆனால் கொரோனா அச்சம் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.  இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.  இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து இன்று இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்கிறது.

இந்த போட்டிகள் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள், நடன அழகிகளென கோலாகலமாக நடப்பது வழக்கமாகும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஐ பி எல் தொடர் எவ்வித கொண்டாட்டமும் இல்லாமல் ரசிகர்களுக்கும் முன் அனுமதி இல்லாமல் எளிய முறையில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகள் 53 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் 8 அணிகளுக்கு இடையே 56 லீக் போட்டிகளும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் போட்டிகளும் நடைபெற உள்ளன.  இன்று மாலை 7 மணிக்கு அபுதாபியில் ஷேக் சையத் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியில் தோனி தலைமையில் சென்னை அணியும் ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணியும் மோதுகின்றன.