கொல்கத்தா:  இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிரபல வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஐபிஎல்  வீரருமான பேட் கம்மின்ஸ் 50ஆயிரம் டாலர் நன்கொடை வழங்கி உள்ளார். பேட் கம்மின்ஸ் நன்கொடைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3லட்சத்தை கடந்த நிலையில், உயிரிழப்பும் 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கிடையில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில்வ ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  . இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்திய மக்களுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக, தனது பங்களிப்பாக  50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.