ஐபிஎல் 2021: ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் 9ந்தேதி தொடங்க வாய்ப்பு…

டெல்லி: ஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி, மே 30ந்தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த வாரம் நடைபெற உள்ள கிரிக்கெட் ஆணையக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது.

நடப்பாண்டு நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் முடிவடைந்த நிலையில், போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.  அதன்படி, ஐபில் போட்டிகளான  ஏப்ரல் 9 முதல் மே 30 வரை விளையாடப்படலாம் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிரிக்கெட் ஆணையத்தின் நிர்வாக சபை (ஜி.சி) ஒப்புதல் அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் பெறப்படும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து கூறிய ஐபில் ஜிசி (Governing Council)  உறுப்பினர் , அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆணையத்தின் கூட்டத்தில், தேதிகள் மற்றும் இடங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை, எங்கெல்லாம் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து  முடிவு செய்யவில்லை என்றவர்,  “ஐபிஎல் முதலில் திட்டமிட்டதை விட அதிகமான இடங்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து  ஆராய்ந்து வருவதாகவும்,  கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், தற்போதைய  நிலைமை இயல்புநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், ஐபிஎல் போட்டிகளை  ரசிகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில்,  மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள்  மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2021 போட்டிகள் ஒரு நகரத்தில் நடத்துவதை தவிர்த்து  நான்கு முதல் ஐந்து நகரங்களில் நடத்து குறித்து பிசிசிஐயும் ஆராய்ந்து வருவதாக கூறியவர்,  இதற்கு ஆணையம் அனுமதி அளித்தால், ஐபில்  லீக்கின் 14 வது பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்களில் விளையாடப்படலாம்.

ஐபிஎல் அணி நிர்வாகத்தினரும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டங்கள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.  அதனால்,  மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் போட்டிகள் நடத்தலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு (2020)  கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கி யஅரசு எமிரேட்டில் ரசிகரகள் அனுமதியின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.