ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – முதல் 5 இடங்களிலுள்ள அணிகள்!

சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் தொடங்கி, 11 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில், விராத் கோலியின் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது.

தான் ஆடிய 3 போட்டிகளில், அனைத்திலுமே வெற்றிபெற்ற அந்த அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தோனியின் சென்னை அணி, 3 போட்டிகளில் 2ல் வெற்றிபெற்று, ரன்ரேட் அடிப்படையில், 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ரிஷப் பன்ட்டின் டெல்லி அணி, 3 போட்டிகளில் 2ல் வென்று, ரன்ரேட் அடிப்படையில், 4 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.

ரோகித்தின் மும்பை அணி, 3 போட்டிகளில் 2ல் வெற்றிபெற்று, ரன்ரேட் அடிப்படையில், 4 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. இயன் மோர்கனின் கொல்கத்தா அணி, 3 போட்டிகளில் 1ல் வெற்றிபெற்று, ரன்ரேட் அடிப்படையில், 2 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் முறையே, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளன.