நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் முத்தையா முரளிதரன் அனுமதி!

 சென்னை: முன்னாள் இலங்கை பவுலரும், சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும்   இருந்து வரும் முத்தையா முரளிதரன் உடல்நவம் பாதிப்பு காரணமாக நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்  திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

முத்தையா முரளிதரன் நேற்று முன்தினம்  தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், உடல்நலம் பாதிக்கப்பபட்டுள்ளது. அவருக்கு மருத்துவ மனையில்  ஆஞ்சியோ பிளாஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில் அவர் குணமடைந்துவிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் உறவினர்கள் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் அவ்வப்போது முத்தையா முரளிதரனை உடல்நிலை குறித்து விவரங்களை தெரிந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது .  கிரிக்கெட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்