ஐபிஎல் 2018 : பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை வென்றது.

ந்தூர்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய ராஜஸ்தான் அனி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தன.  அதிகபட்சமாக பட்லர் 51 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக பஞ்சாப் அணி 153 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கியது.    பஞ்சாப் அணி ஆரம்பத்தில் சற்றே தடுமாறினாலும் பிறகு ஆட்டத்தில் வேகத்தை காட்டியது.   18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது.   அதை ஒட்டி பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பஞ்சாப் அணி இந்த வெற்றியினால் தரவரசைப் பட்டியலில் 3 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.