ராஜஸ்தானுடன் இன்று மோதல் – பஞ்சாபின் வெற்றிப் பயணம் தொடருமா?

அபுதாபி: 2020 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் போட்டியில், இந்த இரு அணிகளும் இரண்டாம் முறையாக மோதுகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனைப் படைத்தது ராஜஸ்தான் அணி.

ஆனால், தற்போது பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று எழுச்சி கண்டுள்ளது. எனவே, இன்றையப் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 4வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 7வது இடத்திலும் உள்ளன.