ஐபிஎல் போராட்டம்: இயக்குனர் கவுதமன் ஜாமினில் விடுதலை

சென்னை:

யக்குனர் கவுதமனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்  ஜாமின் வழங்கியதை  தொடர்ந்து இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது விசுவாசிகள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெற்று வந்தபோது, சென்னையில் ஐபிஎல் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக  அரசியல் கட்சியினர், திரையுலகை சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக, காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு , இயக்குனர் கவுதமனை  கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கில்,  சில வாரங்களாக சிறையில் இருந்த கவுதமனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கியதால், இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஜாமின் வழக்கின்போது,  இனி மேல் அரசுக்கு எதிராக எந்த வித போராட்டங்களிலும் காவல்துறை அனுமதி இல்லாமல் கலந்து கொள்ள மாட்டேன் என்று  இயக்குனர் கவுதமன் சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுத்துபூர்வ உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது  குறிப்பிடத்தக்கது