ஐபிஎல் ஏலம்: ஹர்பஜன்சிங்-ஐ ஏலம் எடுத்தது சிஎஸ்கே

பெங்களூரு:

ரபரப்பாக இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வினை சென்னையை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யும் என்று  எதிர்பார்த்த நிலையில், ரூ.2 கோடிக்கு ஹர்பஜன் சிங்கை ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்று  காலை 10.30 மணி முததல் பெங்களூரில் ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளரான அஸ்வின  பஞ்சாப் அணி அவரை தட்டிச்சென்றது. அதுபோல ஷிகர் தவானை ஐதராபாத் அணி மீண்டும் தக்க வைத்துள்ளது.

இந்நிலையில்,  பிரபல பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அதுபோல,   இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஏற்கனவே  2017 ஐ.பி.எல். போட்டியில் புனே அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

You may have missed