ஐபிஎல் ஏலம்: முன்னணி வீரர்கள் விலை போகாத பரிதாபம்…ஜெயதேவ் உனாட் கட் ரூ.8.4 கோடி

ஜெய்ப்பூர்:

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் யுவராஜ் சிங், மெக்குலம் உள்பட  பல முன்னணி வீரர்கள் விலைபோகாத நிலையில் இளம் வீரர்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக மேற்கு இந்திய தீவு அணி வீரர்கள் கடும் போட்டிகளுக்கு இடையே ஏலம் போயுள்ளனர்.

ஜெய்ப்பூரில் இன்று ஏலம் தொடங்கியதும், மனோஜ் திவாரி முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். ஆனால், அவர் விலை போகவில்லை. அதுபோல யுவராஜ் சிங்,  புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ். கிறிஸ் ஜோர்டன், பென் மெக்டெர் மாட், விக்கெட் கீப்பர் நமன் ஒஜ்ஹா ஆகியோரும் ஏலம் போகவில்லை.

வெஸ்ட் இன்னிஸ் வீரர்கள், ஹனுமந்த் விஹாரி ரூ.2 கோடிக்கும், சிம்ரன் ஹெட்மயர் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போனனார்கள். இவர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.

அக்சார் பட்டேலை 5 கோடி ரூபாய்க்கு டில்லி கேப்பிட்டல் அணி ஏலம் எடுத்தது

அதுபோல இஷாத் சர்மாவும் 1.1 கோடிக்கு டில்லி கேப்பிட்டல் ஏலம் எடுத்தது.

விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பிராத்வைட்டை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்

வீரர் அக்‌ஷர் படேலை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

ரூ.5 கோடிக்கு வீரர் கர்லஸ் ப்ராத்வைட் கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்

வீரர் குர்கீராத் மான் ரூ.50 லட்சத்துக்கு பெங்களூரு அணிக்கு ஏலம் விடப்பட்டார்

வீரர் மொய்சஸ் ஹென்ரிக்யூஸ் பஞ்சாப் அணிக்கு ரூ.1 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

இலங்கை பந்து வீச்சாளரான மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கா ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து,  அதிகபட்சமாக ஜெயதேவ்  உனாட்கத் 8.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுவேல அதிக பட்ச ஏலத்தொகை என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ஷமி 4.80 கோடி,க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டார்.

மோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக ரூ.5 கோடிக்கு எடுக்கப்பட்டார்.