ஐபிஎல்: பெங்களூரு அதிரடி ஆட்டம்….சென்னை அணிக்கு 206 ரன் இலக்கு

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் 24-வது போட்டி இன்று பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களம் இறங்கிய டி வில்லியர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

தொடர்ந்து டி காக்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிவில்லியர்ஸ் & டி காக் ஜோடி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி வீரர்கள் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 206 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி விளையாடி வருகிறது.