ஐபிஎல்: பெங்களூரு அணி 167 ரன்களில் சுருண்டது

பெங்களூரு:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.